திண்டுக்கலில் மே 17ல் கோட்டை மாரியம்மன்கோயில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2019 01:05
திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு முதன் முறையாக அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வர்த்தக சங்கத்தினர் சார்பில் ரூ.22.5 லட்சத்தில் மரத்தேர் செய்ய திட்டமிடப்பட்டது.
கடந்த ஓராண்டாக 12.5 அடி அகலம், 12.5 அடி நீளம், 31 அடி உயரத்தில் மரத்தேர் வடிவமை க்கும் பணி நடந்தது.தற்போது தேர் ரதவீதிகளில் வலம் வர தயார் நிலையில் உள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட விழாவையொட்டி மே 16 ல் மாலை 5:00 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, இரவு 8:45 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடக்க உள்ளது. மே 17 ம் தேதி காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், காலை 9:30 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கலாம். பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.