திருப்பூர்:நால்வர் குறித்த, தெய்வ சேக்கிழார் புராண நாடகம் அரங்கேற்றம் இன்று (மே., 15ல்) நடைபெறஉள்ளது.திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் - ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று (மே., 15ல்) மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சியாக, தெய்வ சேக்கிழார் புராண நாடகம் நடைபெறவுள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய, நால்வரின் வாழ்க்கை குறித்த தெய்வ சேக்கிழார் புராண நாடகம் முதன்முறையாக திருப்பூரில் அரங்கேற்றமாகிறது. திருப்பூர் ஸ்ரீ ஆதீஸ்வரர் டிரஸ்ட் சார்பில், நாடக ஆசிரியர் அறிவானந்தம் குழுவினர் இதை அரங்கேற்றம் செய்கின்றனர். இன்று (மே., 15ல்) மாலை 6:00 மணிக்கு வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் இந்த நாடகம் நடைபெறுகிறது.