வால்பாறை நாகேஸ்வரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2019 02:05
வால்பாறை:வால்பாறை, நாகேஸ்வரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்தனர்.வால்பாறை திருவள்ளுவர் நகர் நாகேஸ்வரியம்மன், முனீஸ்வரன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா, நாளை (16ம் தேதி) நடக்கிறது. இதனை யடுத்து, கொடுமுடி, சிவன்மலை உள்ளிட்ட ஏழு கோவில்களில் இருந்து புனிதநீர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
விழாவில், நேற்று முன் தினம் (மே., 13ல்) மாலை புதுத்தோட்டம் நாகாத்தம்மாள் கோவிலில் இருந்து பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.விழாவில், இன்று (15ம் தேதி) காலை, 7:00 மணிக்கு முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை (16ம் தேதி) காலை 11:30 மணிக்கு நாகேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் செய்து வருகின்றனர்.