பதிவு செய்த நாள்
16
மே
2019
11:05
குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம், கெங்கையம்மன் கோவிலில் , சிரசு ஊர்வல திருவிழா, கோலாகலமாக நடந்தது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையோரம் உள்ள, கெங்கையம்மன் கோவிலின், சிரசு ஊர்வல திருவிழா நேற்று நடந்தது.முன்னதாக, தர்ணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, கெங்கையம்மன் சிரசு, பக்தர்கள் வெள்ளத்தில் காலை, 6:00 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, நேரு தெரு வழியாக, கெங்கையம்மன் கோவிலுக்கு வந்தது.சிறப்பு அபிஷேகம் செய்த பின், மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலில், சிரசு பொருத்தப்பட்டது.
பின், அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசித்தனர்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பம்பை, உடுக்கை, புலியாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, அம்மன் சிரசு, சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு. சுண்ணாம்புபேட்டையில் உள்ள, புங்கனுார் அம்மன் கோவிலுக்கு, ஊர்வலமாக சென்றது.அங்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலுார், எஸ்.பி., பிரவஷே்குமார் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று, உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.