ஒருவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்து பத்து ஏக்கர் நிலம் இருந்தால், ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலமாக பிரித்து எழுதி வைப்பார் தந்தை. ஆனால், ஒரு ஆசிரியரிடம் ஐயாயிரம் பிள்ளைகள் படித்தாலும் சரி. அவர் தன்னிடமுள்ள வித்தையை சற்றும் குறைவில்லாமல், பங்கே போடாமல் ஐயாயிரம் பேருக்கும் கொடுத்து விடுவார். கல்வியறிவுக்கு மட்டுமே இத்தகைய ஸ்பெஷாலிட்டி இருக்கிறது. எத்தனை பங்கு போட்டாலும் குறையாத செல்வம் அது.