ரங்கம் என்பதை தமிழில் அரங்கம் என்பர். இதற்கு மேடை, கூடம் என்று பொருள். காவிரியாற்றின் நடுவில், ஒரு மேடான பகுதி மேடை போல் காட்சியளிக்கிறது. அதில் பெருமாள் கண்மூடி உலகம் என்னும் நாடகமேடையில் நடிக்க வந்துள்ள உயிர்களை இயக்குகிறார். இதனால் ரங்கநாதர் என்று பெயர் பெற்றார். சபை என்றாலும் மேடை, கூடம் என்றே பொருள். சிவபெருமான் சபைகளில் நடனமாடியபடியே (திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, குற்றாலம், திருநெல்வேலி மற்றும் சிவாலய சபைகள்) உலக இயக்க நாடகத்தை அரங்கேற்றுகிறார். இதனால் சபாபதி என்று பெயர் பெற்றார். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை நம்மை அசர வைக்கிறது.