அலங்காநல்லுார்: பாலமேடு சாத்தாவுராயன், காளியம்மன் கோயில் வைகாசி உற்ஸவ பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தன.
பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கிய முதல் நாள் விழாவில் காளியம்மன் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.திருவிளக்கு பூஜைநடந்தது. இரண்டாம் நாள் பழத்தட்டுகளுடன் பெண்கள் நகர்வலம் சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.3வது நாளான நேற்று முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை பாலமேடு, சென்னை வாழ் 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின் முறையினர் செய்தனர்.