மணக்காட்டூரில் அய்யனார் கோயில் திருவிழா கழுமரம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 12:05
செந்துறை: செந்துறை அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் மற்றும் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு கழுமரம் ஏற்றம் நடந்தது.
கடந்த மே 15 அன்று முத்தாலம்மன் கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். நேற்று முன்தினம் (மே., 29ல்) கிராம தேவதைகளுக்கு கனிவைத்தல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு அம்மன் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் மின்அலங்கார ரதத்தில் நகர்வலம் சென்றார்.
நேற்று (மே., 30ல்) காலை அம்மன் குடிபுகுந்தார். அதன் பின் அம்மனுக்கு பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்தனர். பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டினர். விழாவின் முக்கிய நிகழ்வாக படுகளம் போடுதல் மற்றும் கழுமரம் ஏற்றம் நடந்ததது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொட்டும் மழையில் 60 உயரமுள்ள பந்தய கழுமரம் ஏறினர். இதில் பழனிப்பட்டியை சேர்ந்த இளைஞர் உச்சிவரை ஏறி பரிசு பெற்றார். இன்று (மே., 31ல்) அய்யனார் சுவாமி கோயில் மந்தையில் எழுந்தருளி கரந்தமலை சென்றடைவதுடன் விழா நிறைவடைகிறது.