விருதுநகர் மோடி பிரதமராக பதவியேற்றதையொட்டி கோயிலில் தங்கத்தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 12:05
விருதுநகர்: மோடி பிரதமராக பதவியேற்றதையொட்டி விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தங்கத்தேர் பவனி நடந்தது.
லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையொட்டி மோடி பிரதமராக பதவியேற்றார். இதையொட்டி விருதுநகரில் பா.ஜ.,சார்பில் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்க ,பிரகாரத்தில் தங்கத்தேர் பவனி நடந்தது. அங்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு, பிரசாதம் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் சோலையப்பன், பொதுச்செயலாளர் கஜேந்திரன் பங்கேற்றனர். ஏ.பி.டி.,காம்பவுன்ட் இந்திரா நகர் அருகே அன்னதானமும் நடந்தது. அனைத்து ஊராட்சி , நகர்ப்புறங்களிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பா.ஜ.,வினர் கொண்டாடினர்.