பதிவு செய்த நாள்
31
மே
2019
12:05
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அமராவதி ஆற்றுக்கு கோவிலிலிருந்து மாலை, 5:15 மணிக்கு கம்பம் எடுத்து செல்லப்பட்டு ஆற்றில்
விடப்பட்டது. நேற்று முன்தினம் (மே., 29ல்) இரவு, ஐந்து மணி நேரத்திற்கு மேல், வண்ண வண்ண வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டம், அமராவதி ஆற்றில் நடந்த வாண வேடிக்கையை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பஞ்ச பிரகாரம் நடந்தது. இதையொட்டி, இன்று (மே., 31ல்) இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோவிலிலிருந்து தேர்வீதி, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு வழியாக ஜவஹர்பஜார் வந்து, கோவிலுக்கு வந்து சேரும்.
இந்நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். நாளை 1ல், இரவு மாவுடயான் சுவாமியும், அம்மனும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர்.