பழநியில் தெய்வங்கள் வேடத்தில் கேரள பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2019 12:06
பழநி, பழநி முருகன் கோயிலில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் சிவன், பார்வதி, முருகன் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று சேர்த்தலா நகரில் இருந்து வண்ண கோபுர காவடி, மயில் காவடி மற்றும் சிவன், முருகன், பார்வதி வேடமணிந்த பலர் வந்தனர். ஆட்டம், பாட்டத்துடன் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து மூலவரை தரிசனம் செய்தனர். கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்க உள்ளதால் இன்று, நாளை மற்றும் கார்த்திகை நாட்களில் வெளியூர் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என, கோயில் அதிகாரிகள் கூறினர்.