நங்கநல்லூர், சாலிக்கிராமத்தில், நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2019 02:06
மே 31ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை, மூன்று நாட்கள் மிகவும் விமர்சையாக தொடர்ந்து நடைபெற்ற இச்சத்சங்கத்தில் ஏராளமான மகா பெரியவா பக்தர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் நங்கநல்லூர் ஹிந்து காலனி பகுதியில் வசிக்கும் திரு. நாராயணன் கிரஹத்தில் தொடங்கி, இரண்டாம் நாள் சாலிக்கிராமம் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத் திலும் மற்றும் கடைசி நாளான இன்று (ஜூன்., 3ல்) கோடம்பாக்கத்தில் வசிக்கும் திரு. சுப்பிரமணியன் கிரஹத்திலும் நடைபெற்றது. மூன்று நாட்களும் ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதமைக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் வெண்குடை பிடித்தபடி பிரம்மாண்டமான வரவேற்பு நடந்தது.
நம்மாத்துல பெரியவா" என்ற தலையங்கத்தின் கீழ் இதுவரை பதிமூன்று சத்சங்கம் கடந்த ஒரு மாத காலத்தில் நடந்து முடிந்ததுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு பல ஊர்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமையுடன் விஜயம் செய்து ஸ்ரீ சங்கராபுரம், ஒரு நூதன வேத கிராமம் என்ற பரிச்சயமுடன் மேலும் பல சத்சங்கம் நடத்த வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி திரு. கி. வெங்கடசுப்பிரமணியன் (வக்கீல் அண்ணா) முடிவு செய்து தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இதற்கு பக்க பலமாக தசாவதாரம் என்ற ஒரு குழு இயங்கி வருகிறது.
நடந்து முடிந்த இந்த மூன்று நாட்கள் கொண்ட சத்சங்கத்தில், மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் மிக வேகமாக உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம் என்ற ஒரு நூதன வேத கிராமத்தை பற்றி வக்கீல் அண்ணா ஒரு நீண்ட விரிவுரை வழங்கினார்.அடுத்த சத்சங்கம் ஜூன் 5 மற்றும் 9ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.