பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
02:06
திருவண்ணாமலை: ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து வந்தனர். ரமலான் மாதம் நிறைவு நாளான நேற்று (ஜூன்., 5ல்), ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில், மணலூர் பேட்டை சாலையில் உள்ள, ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். சிறுவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். இதே போன்று, மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆவூர், வந்தவாசி, ஆரணி,போளூர்,
கண்ணமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகை நடத்தினர்.
* வேலூர் மாவட்டம், ஆம்பூர் ஈத்தா மைதானத்தில் நேற்று (ஜூன்., 5ல்)ரம்ஜான் சிறப்பு கூட்டு தொழுகை நடந்தது. இதே போல வாணியம்பாடி, வாலாஜாபேட்டை, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கீழ்விஷாரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆர்.என்., பாளையம், சைதாப்பேட்டை பெரிய மசூதியில் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்றனர்.
ரம்ஜானையொட்டி வேலூர் மத்திய ஆண்கள், மகளிர் சிறையில் உள்ள கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.