பழநி கோயிலுக்கு ரூ.20 கோடியில் குடிநீர் சப்ளை: ஜூலையில் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2019 02:06
பழநி:பழநி முருகன் கோயிலுக்கு, பாலாறு அணையிருந்து ரூ.20 கோடி செலவில் குடிநீர் கொண்டுவர உள்ளனர். அடுத்த மாதம் பணிகள் துவங்க உள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு பாலாறு- பொருந்தலாறு, நகராட்சி கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு, குழாய்கள் சேதமடையும்போது குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில் பாலாறு -பொருந்தலாறு அணையிலிருந்து நேரடியாக மலைக்கோயிலுக்கு தண்ணீர் கொண்டுவர கோயில் நிர்வாகம் ரூ.20 கோடி செலவில் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் குடிநீர் வடிகால்வாரியம் மூலம் அடுத்தமாதம் துவங்க உள்ளது.
இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், பாலாறு அணையில் இருந்து நேரடியாக கோயிலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்திடம் நிதி வழங்கியுள்ளோம். ஜூலையில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. இதன் மூலம் கோயில் மட்டுமின்றி தங்கும் விடுதிகள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்,என்றார்.