பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
02:06
ஈஷா சார்பில் உலகம் முழுவதும் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் 5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் (ஜூன் 21) நடைபெற உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ராணுவ வீரர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலத் தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் மூலம் உப-யோகா என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட உள்ளது.
இதன் ஒருபகுதியாக, அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊடூணிச்tடிணஞ் ஈணிஞிடு எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் திரு.பிமல் வர்மா அவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து பிற்பகலில் ராணுவ அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாட உள்ளார்.
இதுதவிர, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நாளை யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ் அங்கீகாரம்
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஈஷா யோகா மையத்தை அங்கீகரிக்கப்பட்ட யோகா நிறுவனமாக அறிவித்துள்ளது. மேலும், அமைச்சகத்தின் வழிகாட்டுக் குழுவிலும் ஈஷாவை இணைத்துள்ளது. இதையடுத்து, உலக யோகா தினத்திற்காக பல்வேறு செயல்திட்டங்களை யும் முன்னெடுப்புகளையும் ஈஷா மேற்கொண்டு வருகிறது.
பி.எஸ்.எஃப் - உடன் சிறப்பு ஒப்பந்தம் அதன் ஒருபகுதியாக, எல்லைப் பாதுகாப்பு படையின ருடன் ஈஷா அறக்கட்டளை ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரண்டரை லட்சம் எல்லைப் பாதுகாப்பு படை வீர்ர்களுக்கு, சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர் கள் மூலம் அறிவியல் முறைப்படி யோகா சொல்லித் தரப்படும். மேலும், துணை ராணுவப் படையினருக்கு மிகப் பெரிய அளவில் ஹடயோகா வகுப்புகளை நடத்த ஈஷா அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐ.நா சபையிலும் சியாச்சினிலும் சத்குரு முதலாம் ஆண்டு உலக யோகா தினத்தின் போது, சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் சத்குரு கலந்துகொண்டார்.
2-ம் ஆண்டு யோகா தினத்தில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்று உரை நிகழ்த்திய சத்குரு முக்கிய பிரமுகர்களுக்கான யோகா வகுப்பை அவரே நேரடியாக நடத்தினார்.
3-ம் ஆண்டு யோகா தினம் கின்ன்ஸ் சாதனை படைத்துள்ள 112 அடி ஆதியோகி முன்பு நடந்தது. இதில் அப்போதைய தமிழக ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவ் மற்றும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் டாக்டர். மகேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.
4-ம் ஆண்டு யோகா தினத்தின் போது உலகின் மிக உயரமான சியாச்சின் மலை சிகரத்துக்கு சென்ற சத்குரு அங்குள்ள ராணுவ வீரர்கள் அங்கமர்த்தனா என்னும் சக்திவாய்ந்த யோக பயிற்சியை கற்றுக்கொடுத்தார். 5-ம் ஆண்டு (2019) யோகா தினத்தையொட்டி சத்குரு அவர்கள் மீண்டும் ஐ.நா.,வுக்கு செல்கிறார்.