பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 8.97 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவை, 3, 4 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். பசலி ஆண்டு முடிவதை முன்னிட்டு, நேற்று (ஜூன்., 25ல்), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, தக்கார் வெங்கடேஷ், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
அதிலிருந்த பணம் தன்னார்வலர்கள் மற்றும் வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது. அதில், எட்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 990 ரூபாய் காணிக்கை இருந்ததாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு முன், கடந்த மே, 30ல் உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது, 40 லட்சத்து, 46 ஆயிரத்து, 905 ரூபாய், 44 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத் தக்கது. இதேபோல், நரசிம்மசாமி கோவிலிலும் நேற்று (ஜூன்., 25ல்) உண்டியல் திறக்கப் பட்டது. அதில், ஒன்பது லட்சத்து, 1,189 ரூபாய், 37 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி இருந்த தாக, நிர்வாகிகள் கூறினர்.