ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர மண்டபத்தில், "தினமலர் செய்தி எதிரொலியால் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் மண்டபத்திற்கு கடந்தாண்டு, ரூ.15லட்சம் செலவில் மேற்கூரை வேயப்பட்டது. இங்குதான் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆடி மாத திருவிழா போன்றவைகள் நடந்து வருகிறது. திருவிழா காலங்களை தவிர, மற்ற நாட்களில் இருளடைந்து காணப்பட்டது. இதனால் பெண் பக்தர்கள் அச்சத்துடன் கோயிலுக்கு சென்று வந்தனர். இது தொடர்பாக "தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம், ஆடிப்பூர மண்டபத்தில் டியூப் லைட்களை பொருத்தியது. இதனால் இரவு நேரங்களிலும் பக்தர்கள் தயக்கமின்றி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.