செல்வ நாயகியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2019 12:07
அன்னுார்: செல்வ நாயகியம்மன் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் பிள்ளையப்பம்பாளையத்தில், 600 ஆண்டுகள் பழமையான செல்வ நாயகியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத அமாவாசையான நேற்று மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. செல்வ நாயகி அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உட்பிரகாரத்தில் உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ௨ ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னுார், சரவணம்பட்டி, பகுதியிலிருந்து திரளான மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காடை குலத்தினர் செய்திருந்தனர்.