பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், அம்பராம்பாளையம் ஆற்றில் முன்னோர்களுக்கு, மக்கள் திதி கொடுத்தனர்.