நடுவீரப்பட்டு அருகே மலையாண்டவர் கோவிலில் சிவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2019 03:07
நடுவீரப்பட்டு : சி.என். பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 1ல்) மாதசிவராத்திரி பூஜை நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 1ல்) ஆனி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அன்று இரவு 7:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் மற்றும் ஆலய வெளி பிரகாரத்தில் உள்ள அனைத்து சிவலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.