கடலூர்:திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பிரதான நுழைவு வாயில் திறப்பு விழா இன்று (ஜூலை 4ல்.,) நடக்கிறது.திருவந்திபுரம் செங்கமல தாயார் சமேத ஸ்ரீதேவநாத சவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டது. இக்கோவில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வருவதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் நுழைவு வாயிலை அமைத்து கொடுத்து கோவிலுக்கு பெருமை சேர்த்துள்ளார்.அதற்கான திறப்பு விழா இன்று (ஜூலை 4ல்.,) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடக்கிறது. அதையொட்டி நுழைவு வாயிலில் சிறப்பு பூஜை நடந்தது.