சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசிய பூஜைக்கு, தங்கத்தால் செய்யப்பட்ட வில்வம் இலை மாலையை, டாக்டர் ஒருவர், காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு, சிதம்பர ரகசியம். இது, சித்சபையில் மூலவர் நடராஜருக்கு வலது புறத்தில், ஆகாயலிங்கம், மந்திர வடிவில், எந்திர சக்கரமாக காணப்படுகிறது. இதற்கு, தங்கத்தால் ஆன வில்வ இலை மாலை அணிவிக்கப்படும். அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் சண்முகம், தன் பெற்றோர் விருப்பத்தின்படி, நடராஜர் கோவில் சிதம்பர ரகசியத்திற்கு, தங்கத்தால் ஆன வில்வ இலை மாலையை, காணிக்கையாக செலுத்தியுள்ளார். தங்க வில்வ மாலை, 44 கிராமில், 11 இலைகளில், வெள்ளிக் கம்பியில் கோர்த்து செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். இதற்கு, சித்சபையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.