கோயில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 12:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கம்பத்திற்கு ஏராளமான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி, அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.
ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஜூலை 17 வரை பத்துநாட்கள் நடக்கிறது. இதற்காக கோயில் சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்புறம் மண்டபத்தில் கம்பம் நடப்பட்டது. மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். குழாய் வேண்டும்: கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்கு, முன் வராகநதியிலிருந்து பக்தர்கள் தண்ணீர் எடுத்து வருவர். தற்போது வராகநதியில் சாக்கடை கலந்துள்ளதால் யாரும் கால் கூட நனைப்பதில்லை. கோயிலில் உள்ள ஒரு குழாய் போதுமானதாக இல்லை. இந்த சமயங்களில் நகராட்சி சார்பில் தற்காலிக குழாய் அமைக்கப்படும். அதிலிருந்து பக்தர்கள் தண்ணீர் எடுத்து, கம்பத்திற்கு ஊற்றுவர். அது அமைக்கப்படவில்லை. அதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.