காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பங்கள் ரசாயனம் பூசி பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 01:07
காஞ்சிபுரம்:கைலாசநாதர் கோவில் சிற்பங்களில், மழை நீர் இறங்காமலும், செடிகள் முளைக்காமல் தடுக்கும் வகையிலும், ரசாயனம் கலவை மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், ஏழாம் நுாற்றாண்டில், நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள நுாற்றுக்கணக்கான சிற்பங்கள் மணற்கற்கலால் செய்யப்பட்டது.காண்போரை கவரும் வகையில் இன்றும், கலை அழகுடன் காணப்படுகிறது. இதற்கு கலைக்கோவில் என்ற சிறப்பு பெயரும் உள்ளது. தொல்லியல் துறை பராமரிப்பில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இது குறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புராதான கோவிலை இருக்கின்ற நிலையிலே பாதுகாக்க வேண்டும். சிலைகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் மழை நீர் உள்ளே புகாமல் இருக்கவும், செடிகள் முளைக்ககாமல் தடுக்கும் வகையில் ரசாயனம் பூசப்படும். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பணிகள் நடப்பது வழக்கம் என்றார்.