பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
01:07
திருத்தணி: திருத்தணி, முருகன் கோவில் குளத்தில் நடக்கவிருக்கும், தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி, துவங்கியது.
திருத்தணி, முருகன் கோவிலில், இம்மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஆடிக் கிருத்திகை விழா நடக்கிறது.இதில், 26 - 28ம் தேதி வரை, மூன்று நாட்கள், மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தில், தெப்பத் திருவிழா நடைபெறும். இந்நிலையில், குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால், தெப்பம் கட்டுவதற்கு முடியவில்லை. ஆகையால், முதற்கட்டமாக, தெப்பம் கட்டுவதற்கு, தனியார் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்து வந்து, குளத்தில் தண்ணீர் நிரப்புவது என, கோவில் நிர்வாகம் தீர்மானித்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல், டிராக்டர்களில் தண்ணீர் எடுத்து வந்து, குளத்தில் விடப்படுகிறது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.