மானாமதுரை:மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் மழை வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் ஆனி செவ்வாய்பொங்கலை முன்னிட்டும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் 2 வருடங்களுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு கிராமத்திலிருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்து செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும் பொம்மைகளுக்கும் பூஜை நடத்தி மேளதாளம் முழங்க புரவிகளையும் , பொம்மைகளையும் ஊர்வலமாக விளாக்குளத்திற்கு எடுத்து சென்றனர்.