பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
திருப்போரூர்:தையூர், அறம் வளர்த்தநாயகி சமேத மாரீஸ்வரர் கோவிலில், ராஜகோபுர கும்பாபிஷேகம், இன்று (ஜூலை., 15ல்) நடைபெறுகிறது.
திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த தையூரில், 2,000 ஆண்டுகள் பழமையான, அறம் வளர்த்த நாயகி சமேத மாரீஸ்வரர் கோவில் உள்ளது.சத்குரு சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் மூலம் புதுப்பணி செய்யப்பட்டு, இக்கோவிலில் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. பெருவிழா நடத்துவதற்கு ஏற்ப கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளது.பழமை வாய்ந்த கோவி லுக்கு ராஜகோபுரம் அமைக்க, திருப்பணி குழுவினர் மற்றும் தையூர் கிராமத்தினர் முடிவு செய்தனர்.திருப்பணி செயலரும், கோவில் அர்ச்சகருமான குருநாதன் தலைமை யிலான குழுவினர்கள் ஏற்பாட்டில், ராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
இதையடுத்து, ஐந்து நிலை ராஜகோபுரத்தின் குப்பாபிஷேகம், இன்று (ஜூலை., 15ல்) காலை, 9:30 மணிக்கு, கோலாகலமாக நடைபெறுகிறது.
தொடர்ந்து, மூலவர், விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.பின், மாலை, 6:00 மணிக்கு, திருக்கல் யாண உற்சவமும், சுவாமி வீதி உலா வைபவமும் விமரிசை யாக நடைபெற உள்ளன. ராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு, திருமுதுகுன்றம் வீரசைவ ஆதினம், திருவெளிச்சை யோகானந்தமயி உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.முன்னதாக, இவ்விழாவை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தன.