Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பணப்புழக்கம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குதூகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குதூகலம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
04:07

சனி, கேது, குருவால் மாதம் முழுவதும் நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்களின் பாதிப்புகளை இந்த மூன்று கிரகங்களும் தடுக்கும். சுக்கிரன் ஜூலை 24ல் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்.  புதன் ஆக.2 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து  முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்தலாம். அதன்பின் அவர் உங்கள் ராசிக்கு  மாறுவதும் சிறப்பானது அல்ல. இதனால் வீட்டில் பிரச்னை உருவாகலாம்.
குடும்ப வாழ்வில் குரு பகவான்  குதூகலத்தை கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஜூலை31, ஆக.1,2ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 27,28ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் ஆக.7,8ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் ஆக.10க்குப்பின் பிறகு சிலரது வீட்டில்  திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது. ஆக.2க்கு சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். ஜூலை 25,26ல் சிறப்பான பலன் காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். கூட்டாளிகள்  உதவிகரமாக செயல்படுவர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூலை 29,30 ஆக.3,4ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  ஆக.11,12,13ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பின்னர் பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.  

கலைஞர்களுக்கு இருந்த காரியத்தடை, பொருள் நஷ்டம் முதலியன ஜூலை 23க்கு பிறகு மறையும்.அதன் பிறகு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள்,  பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களிடம் அறிவுரையை பின்பற்றவும். குரு சாதகமான இடத்தில் இருப்பதால் படிப்பதற்கான சூழ்நிலை அமையும். அதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை வரும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். மனம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஜூலை 24க்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி பெருகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும்.ஜூலை17,18,19, ஆக. 14,15 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

* நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 25, 26, 27, 28, 31 ஆக.1, 2, 5, 6, 11, 12, 13, 14, 15
* கவன நாள்: ஜூலை 20, 21 ஆகஸ்ட் 16, 17 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள், சிவப்பு  

* பரிகாரம்:
●  வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு
●  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
●  காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar