Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுகவாழ்வு துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முன்னேற்றம்
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முன்னேற்றம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
04:07

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். 11-ல் உள்ள சூரியன் நல்ல வளத்தை கொடுப்பார். புதன் ஆக.3ல் மிதுன ராசியில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை24ல் கடகத்திற்கு வந்து நன்மை தருவார். செவ்வாய் ஆக.10 வரை கடகத்தில் இருந்து  நன்மை தருவார்.  

சூரியனால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். கையிலுள்ள பணத்தை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. எடுத்த முயற்சி அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சமூகத்தில் மரியாதை மேம்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் குதூகலம் தொடரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். ஜூலை24க்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். ஜூலை31, ஆக.1,2ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.11,12,13ல் உறவினர் வகையில் பிரச்னை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்கள் திருப்தியுடன் பணியில் ஈடுபடுவர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் வேலை பார்ப்பவர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஜூலை 29,30ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.  பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பகைவர்களின் இடையூறுகள் இடம் தெரியாமல் போகும். புதனால் ஆக.2க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூலை20,21,ஆக.16,17ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.  ஆக.3,4,7,8ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

கலைஞர்களுக்கு இருந்த எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூலை 23க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஆக.10க்குள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் முன்னேற்றமான நிலையில் இருப்பர். படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு செலவு கட்டுக்குள் வரும். வருமானம் அதிகரிக்கும். நெல், பாசிப்பயறு, சோளம்,காய்கறி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து ஆக.10க்குள் வாங்கலாம். அதன்பின் வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். ஆக.9,10ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  ஜூலை 22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். உடல்நிலை சீராகும்.  

* நல்ல நாள்: ஜூலை 20,21,22,23,24,29,30,31 ஆக.1,2,5,6,9,10,16,17
* கவன நாள்: ஜூலை 25,26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்கள்: 1,9
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்
●  வெள்ளிக்கிழமை ராகுகால துர்கை தரிசனம்
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar