பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
02:07
அவிநாசி:அவிநாசியில் உள்ள புனித தோமையார் தேவாலயத் திருவிழா, நேற்று (ஜூலை., 29ல்)கோலாகலமாக நடந்தது.அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித தோமையார் தேவாலய திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த, 24,25,26 ஆகிய தேதிகளில், மாலை, சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது .திருவிழா நாளான நேற்று (ஜூலை., 29ல்), காலை, 8:30 மணிக்கு மறை வட்ட முதன்மை குரு ஆரோக்கியராஜ் ஸ்டீபன் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.
இதில், அருட்தந்தையர்கள் ஜான் ஜோசப், ஹென்றி டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பலி முடிவில், தேவாலயத்தை சுற்றி, தோமையார் சப்பரம் பவனியாக எடுத்து செல்லப் பட்டது.மாலை, 5:30 மணிக்கு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. அருட் தந்தை கனகராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில், 15க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்றனர். மாலை, 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், புனித தோமையார் பவனி வந்தார். பவனியில் பங்கேற்ற பக்தர்கள், ஜெபமாலை செய்த படியும், பாடல் பாடிய படியும் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தேவாலய பங்குகுரு கென்னடி மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.