பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
02:07
பல்லடம்: பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் நிலத்தை, பசுமையாக்கும் முயற்சியை வனம் அமைப்பு மேற்கொண்டுள்ளது.வனம் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் நிலம், புதர் நிறைந்து காணப்பட்டது. அவற்றை அகற்றி, பசுமை மிகுந்த பூங்காவாக மாற்ற திட்டமிட்டோம். மாவட்ட நிர்வாகம், மற்றும் அறநிலைய துறையின் அனுமதி பெற்று, புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
அதற்காக, பல லட்சம் செலவில் சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகிறோம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், தியானம் செய்ய வும், தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.அடிகளார் வனம் எனும், கோவில் நிலத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம், முத்துக்குமார சுவாமி கோவில் நிலத்தை பசுமையாக்கி வருகிறோம். அதற்கு, கோவை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.