அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் உள்ள கைலாசநாதர்–ஆனந்தவள்ளியம்மன் கோயில் பல நுாற்றாண்டு புகழ் வாய்ந்த கோயில். நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. அம்மன் உற்ஸவரராக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளாமான பெண்கள் வழிபட்டனர். பெண்கள் அனைவருக்கும் வளையல், மஞ்சள், கிழங்கு வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி டாக்டர் பெருமாள் செய்திருந்தார்.