பதிவு செய்த நாள்
05
ஆக
2019
02:08
பண்ருட்டி:பண்ருட்டி லட்சுமிபதி நகரில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில், ஆடிமாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு வளையல் திருவிழா நேற்று (ஆக., 4ல்) நடந்தது.
நேற்றுமுன்தினம் (ஆக., 3ல்) காலை 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் கழுத்து அம்மன் முந்திரி பருப்புகளால் ஆன சிறப்பு அலங்காரத் தில் காட்சி அளித்தார். ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வளை யல், தாலிசரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கினார். தொழிலதிபர்கள் மாய கிருஷ்ணன், வைரக்கண்ணு, சந்திரசேகர், ராமகிருஷ்ணன்,, செந்தில்குமார், ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.