மார்க்ட்வைன் என்ற அறிஞர், கூட்டம் ஒன்றில், இரவு 7:00 மணிக்கு பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஐயாயிரம் பேர் கூடியிருந்தனர். மணி எட்டாகியும் ட்வைன் வரவில்லை. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு என்ன செய்வது என புரியவில்லை. நாளை இரவு 7:00 மணிக்கு துவங்கும் என அறிவித்தனர். கூடியிருந்தவர்கள் சலிப்புடன் கலைந்தனர். வெளியூரில் இருந்து வந்த பலர் ஊருக்கு புறப்பட்டனர். மறுநாள் இரண்டாயிரம் பேர் கூடினர். அன்றும் ட்வைன் வரவில்லை. “அவருக்கு உடம்பு சரியில்லை. நாளை 7:00 மணிக்கு வாருங்கள்” என அறிவிக்கப்பட்டது. மக்கள் திட்டிக்கொண்டே வீடு திரும்பினர். மறுநாள் ஐநூறு பேர் மட்டுமே வந்தனர். மார்க்ட்வைன் சரியாக 7:00 மணிக்கு மேடை ஏறினார். “மக்களே! இரண்டு நாட்களாக இந்த ஊரில் தான் இருந்தேன். ஆனால் வராததற்கு காரணம், உங்களில் யாருக்கு, சகிப்புத்தன்மை அதிகம் என அறிய விரும்பினேன். சகிப்புத்தன்மையால் தான் மகான்கள் நிம்மதியாக இருக்கின்றனர். இங்கு கூடியிருக்கும் ஐநூறு பேருக்கும் சகிப்புத்தன்மை அதிகம். துன்பம் நேரும் காலத்தில் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியும்” என்றார். மக்களும் அதிலுள்ள உண்மையை ஏற்றுக் கொண்டனர்.