பதிவு செய்த நாள்
08
ஆக
2019
11:08
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில், கொட்டும் மழையில் நெற்கதிர்களை வைத்து, நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து வணங்குவது நிறைபுத்தரிசி பூஜை. இதற்காக, நேற்று(ஆக.,6) மாலை, 5:00 மணிக்கு சபரிமலை நடை திறந்தது. பக்தர்கள் நெற்கதிர்களை கொண்டு வந்து, தந்திரியிடம் ஒப்படைத்தனர். இன்று(ஆக.,7) அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்; 5:30 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை தொடங்கியது. தந்திரி பூஜித்து கொடுத்த கதிர்களை, மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள், கொட்டும் மழையில், கோயிலை சுற்றி எடுத்து வந்தனர். பின், நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெற்றது; இரவு, 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, வரும், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படும்.