திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 12:08
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது.இதையொட்டி நேற்று காலை சண்முகர் சன்னதியிலுள்ள மூலவர்கள் விநாயகர், திருஞான சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது.கோயில் ஓதுவார்களால் ஏழாம் திருமுறை முற்றோதுதல் நடந்தது.உற்ஸவர் சுந்தரர் பல்லக்கில் கொடி கம்பம், நந்தியை மூன்று முறை வலம் சென்று, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.