திருவேங்கடமுடையான் கோயிலில் மூலைகருடனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 12:08
காரைக்குடி: அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஆடிமகா சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலைகருடனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் கருடாழ்வார் அவதரித்த தினம் என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. காலையில் சன்னதி கருடனுக்கு அபிஷேகம் முடிந்து கோயில் தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள மூலை கருடனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காரைக்குடி, அரியக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு தலைவர் ராமநாதன் மற்றும் செயல் அலுவலர் தமிழ்செல்வி செய்திருந்தனர்.