பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
ராமநாதபுரம் :ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில், பங்குனி விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி விழா மற்றும் பூக்குழி ஏப்.,5ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை டிரஸ்டி கணேசன் செய்து வருகிறார்.
* அல்லி கண்மாய் மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை துவங்கினர். ஏப்.,6ம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன் தலைமையில், செயல்அலுவலர் சுவாமிநாதன் செய்து வருகின்றனர்.
* குயவன்குடி சுப்பையா சாது சுவாமி கோயிலில், பங்குனி விழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றி பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி விழா ஏப்.,5ல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடக்கிறது. பக்தர்கள் காவடி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.