திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்த்து, விழா அனுமதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தன. நேற்று காலை கோயில் யானைமீது கொடிப்பட்டம் வீதி உலா சென்று கொடிமரத்தில் கட்டப்பட்டது. கொடிக்கம்பம்முன், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டது. திருவிழா நம்பியார் செல்லப்பா சிவாச்சார்யார்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது. விழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.