ராமநாதபுரம்: வெளிப்பட்டணம் சாயக்காரத்தெரு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 35 ஆண்டு பாரிவிழா நேற்று (ஆக., 7ல்) பாரிகள் கங்கை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் நிறைவடை ந்தது.
சாயக்காரத்தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 35ம் ஆண்டு பாரிவிழா கடந்த ஜூலை 28ல் முத்து எடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாகணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந் தது. பாரிவிழாவை முன்னிட்டு அம்மன் தினமும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை உள்ளிட்ட வெவ்வேறு நிறங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.
ஆக., 2ல் திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து பூச்சொரிதல் விழாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பாரிகள் கங்கை சேர்த்தல் நிகழ்வு நேற்று (ஆக., 7ல்) நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.