திருப்பதி: திருமலையில் இந்த வருட பிரம்மோற்சவம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி துவங்கி அக்டோபர் 8ம்தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய விழாக்களான கொடியேற்றம் 30ம்தேதியும், கருட சேவை அக்டோபர் 4ம் தேதியும், தங்கரதம் 5ம் தேதியும், தேரோட்டம் 7ம் தேதியும், சக்ரஸ்நானம் 8ம் தேதியும் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் கூறும்பொழுது பிரம்மோற்சவ ஏற்பாடுகள் வழக்கம் போல சிறப்பாக நடந்துவருகின்றது.போலீசார் தவிர 3ஆயிரத்து 500 தொண்டர்களும் ஆயிரம் ஸ்கவுட் மாணவர்களும் பக்தர்களுக்கு சேவை செய்ய இருக்கின்றனர். செப்டம்பர் 20 ந்தேதிக்குள் விழாவிற்கு கோவில் தயராகிவிடும் 24 ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் மங்களப்பொருட்களால் கோவிலை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறும் என்றனர்.