பெரியகுளம் :பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா துவங்கியது. முருகன் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா ஏப். 4ல் நடக்கிறது. அர்ச்சகர்கள் செந்தில், குமார், பா.ஜ., மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோபிக்கண்ணன், முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் சசிதரன், செயலாளர் சிதம்பரசூரியவேலு, அமைப்பாளர்கள் கனகசபை, வைகுண்டம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர்.