பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
உடுமலை:உடுமலையில், ஹர்ட்புல்னஸ், ஸ்ரீராம்சந்த்ர மிஷன் சார்பில், மூன்று நாட்கள், தியான உற்சவ திருவிழா நடந்தது
உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், நாள்தோறும், 500க்கும் அதிக மானோர், பங்கேற்று, தியானம், சுத்திகரிப்பு மற்றும் பிரார்த்தனை தியானத்தை கற்றுக் கொண் டனர். நிகழ்ச்சிகளில் டாக்டர் பாலசுந்தரம், நகராட்சி கமிஷனர் ராஜாராம், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பேசினர். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், லதா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் சுப்பு ஆகியோர் தியானத்தின் பயன்கள் குறித்து பேசினர்.