பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
ஆத்தூர்: ஆத்தூர் சோமநாதசுவாமி கோயி ல் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் நேற்று காலை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், தக்கார் சரவணபவன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி எழுந்தருளல், சுவாமி அம்பாள் திருவீதி உலா, அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் இரவில் சமய சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. பத்தாம் திருவிழாவான வரும் 5ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும், 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழாவும், சுவாமி வாகன உலாவும் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் அக்தார் கருத்தப்பாண்டியன், ஆத்தூர் பஞ்.,தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் கண்ணன், ஆண்டியப்பன், ஐயப்ப மண்டல குருசாமி மூக்கன், அண்ணாமலை சுப்பிரமணியம், ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களும், பொதுமக்களும் செய்துள்ளனர்.