பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை, பவளமலையில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்., 5ம் தேதி நடக்கிறது. கோபி பச்சமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 29ம் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. 10ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை, 5 மணிக்கு பூதவாகனத்தில் ஸ்வாமி வீதி உலா, 6 மணிக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. 31ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்வாமி தேர்வீதி வலம் வருதல், 6 மணிக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதப்புறப்பாடு நடக்கிறது. ஏப்., 1ம் தேதி காலை 9 மணிக்கு யாக பூஜை, மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஸ்வாமி தேர் வீதி வலம் வருதல் நடக்கிறது. 2ம் தேதி மாலை 5 மணிக்கு அன்னவாகனத்தில் ஸ்வாமி வீதி உலா, 3ம் தேதி மாலை 5 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 4ம் தேதி காலை 8 மணிக்கு யாக சாலை, காலை 9 மணிக்கு சண்முகருக்கு சிகப்பு சார்த்துதல், காலை 10 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, மாலை 3 மணிக்கு ஸ்வாமி தேர்வீதி வலம், 6 மணிக்கு சண்முகருக்கு வெள்ளை சாத்தி, இரவு 7 மணிக்கு தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.
ஏப்., 5ம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மகன்யாச அபிஷேகம், 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சார்த்துதல், காலை 9 மணிக்கு காவடி, பால்குடங்கள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. 6ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 11 மணிக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, மாலை 5 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வருதல், மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம், 6.30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமான் மலர் பல்லாக்கில் நகர் வலம் வருதல் நடக்கிறது. 7ம் தேதி காலை 9 மணிக்கு யாஹசாலை பூஜை, பகல் 11.30 மணிக்கு தெப்பத்திருவிழா, கொடி இறக்குதல், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், சுப்பிரமணியர் தேர் வீதி உலா வருதல் நடக்கிறது.
* பவளமலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி காலை 7 மணிக்கு அலகு குத்துதல், காவடி எடுக்கும் நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு மகன்யாச அபிஷேகம், 10 மணிக்கு சிறப்பு கல்காவடி, 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், காலை 11 மணிக்கு காவடி அபிஷேகம், 12 மணிக்கு மஹா தீபாராதனை, அன்னதானம், மாலை 4 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.