அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பூங்கரகம் மற்றும் அக்னி கரக விழா நடந்தது. மேல் மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோவிலில் ஆடி மாத 4ம் வெள்ளியையொட்டி, பூங்கரகம் மற்றும் அக்னி கரக விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இயற்கை வளம் வேண்டி பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மேலும் நுழைவு வாயிலுக்கான திறப்பு விழாவும் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.