பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
வடமதுரை: மோளப்பாடியூரில் நம்பெருமாள், வீரசின்னம்மாள், வீரபெத்தம்மாள், சப்த கன்னிமார், பட்டாளம்மன், கருப்பணசுவாமி, லாட சன்னாசி கோயிலில் பெரிய கும்பிடு உற்ஸவ திருவிழா 3 நாட்கள் நடந்தது.
எட்டிகுளத்துப்பட்டியில் இருந்து சலகருது மாடு அழைத்து வந்து பூஜை, நேர்த்திக்கடன் வழிபாடுகள், பிறந்த வீட்டு பெண் பிள்ளைகளுக்கு சீர் வழங்குதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாட்டினை கோப்பம்பட்டி, எட்டிக்குளத்துப்பட்டி, கரிவாடன்செட்டிபட்டி, கே.புதுப்பட்டி, மாலைப்பட்டி, பட்டிவீரன்பட்டி, வடமதுரை, கோட்டப்பட்டி, திண்டுக்கல், மல்வார்பட்டி, தேவரப்பன்பட்டி என பல ஊர்களில் வசிக்கும் சாலிய வாகன கம்புதிரிவார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.