கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்தனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி நேற்று (ஆக., 15ல்), நடந்தது. இதனையொட்டி காலை 10:30 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலசங்கள் வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து, பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் செய்து, சிவகர தீர்த்தகுளத்தில் எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடந்தது. 30 சிவாச்சாரியார்கள் பூணுால் அணிந்து கொண்டனர்.