திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை மஹோத்சவம் நடந்தது. திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹரிவாயு ஸ்துதி பாராயணம், 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.