பதிவு செய்த நாள்
17
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள, சாலிநாயனப்பள்ளி கிராமத்தில், முனீஸ்வரசுவாமி கோவிலில், 31ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் 15ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கி, வரும், 20 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் 15ம் தேதி காலை, 7:30 மணி க்கு, சேவாட்டம், மேள, தாளத்துடன் பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு சுவாமி நையாண்டி மேளத்துடன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 20 வரை சுவாமி ஊர்வலமும், இரவு நாடகமும், சடல் தேர் ஊர்வலமும் நடக்க உள்ளது.